மனுசன் காட்டும் அன்பு
manusan kaattum anbu
மனுசன் காட்டும் அன்பு எல்லாம் வேசம்தானே அதை நம்மி நீயும் பின்னால் போனால் மோசம் வருமே-2 மனுசனை நம்பி நடப்பதோ ஒன்னும் இல்ல -2 கர்த்தர் மேலே நம்பிக்கை வச்சா துன்பம் இல்லை -2
பாவத்திலே வாழ்ந்திருந்தேன் பாவி என்னை தேடி வந்து -2 பாசம் வைத்து நேசம் நேசம் வைத்து பாவம் நீக்க ரட்சித்தாரே -2 நீசன் என்று தள்ளிடாமல் நேசம் வைத்து ஏற்றுக் கொண்டார் -2 பாடுவேன் அவரை பாடுவேன் வாழுவேன் அவருக்காய் வாழுவேன்
நன்மை செய்த இயேசுவுக்கு நன்றி சொல்லி பாடிடுவேன்-2 நல்ல சாமி இயேசு என்று ஊரெங்கும் கூறிடுவேன்-2 அவர் போல அன்பு காட்ட உலகத்தில யாருமில்லை -2 பாடுவேன் அவரை பாடுவேன் வாழுவேன் அவருக்காய் வாழுவேன்
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே நீ கலங்கிடாதே -2 நீ தேடும் நிம்மதி இயேசு உனக்கு தந்திடுவார் -2 கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் உன்னை காத்திடுவார் -2 பாடுவோம் அவரை பாடுவோம் வாழுவோம் அவருக்காய் வாழுவோம்