மனுக்கோல மேனோ மனுவேலனுக்கோ
manukkola meno manuvelanukko
மனுக்கோல மேனோ மனுவேலனுக்கோ மனுக்குலம் மீட்பதற்கோ மகிமையும் விடவோ - மரிமகவானதோ - 2 மகிமை மகிமை மகிமை
1. பாவியா மெனையே - பரமனு மெண்ணியே - 2 காவினில் கந்தையணிந்தோ மகிமையும் தள்ளியே மனுவானீர் மண்ணிலே - 2 மகிமை மகிமை மகிமை
2. உன்னத மன்னனே இன்னிலம் மீதிலே - 2 முன்னணை தான் தொட்டிலோ என்னையும் சேர்க்கவோ ஏழையின் கோலம் - 2 எடுத்தீர் எடுத்தீர் எடுத்தீர்
3. பூவுலகிறையே பூவினிலுறையே - 2 புகலிடமும் அரிதோ மகத்துவ மின்றியே மனுவாகத் தோன்றவே - 2 மகிமை மகிமை மகிமை
4. சுகத்தையும் உரிந்து ஜெகத்தினில் உதித்து -2 பகைவருக்கு இரங்க தாகமும் பசியும் தாங்கவும் அன்பினால் - 2 பிறந்தீர் பிறந்தர் பிறந்தீர்
5. மகிமையும் கனமும் மகிபருக்கென்றுமே - 2 ஆதி அந்தமும் அவரே மகத்துவ மவர்க்கே மாட்சிமை அன்பர்க்கே - 2 மகிமை மகிமை மகிமை