மன்னுருவானார் ஆதி மன்னுருவானார்
mannuruvaanaar aadhi mannuruvaanaar
மன்னுருவானார் ஆதி மன்னுருவானார் ஏதும் தன்னிகரில்லாத ஆதி மன்னுருவானார்.
1. மன்னன் தாவீது வம்சக் கன்னியாம் மாது அந்தக் கன்னி யென்னும் அன்னை மரி தன்னிடமாக (2) ஆதி தன்னிடமாக.
2. வல்லமைத் தேவன் தீர்க்கர் சொல்லும் மெய்த் தேவன் சிறு வெல்லைமலைக் கல்லுறத்தப் புல்லணையிலே புல்லணையிலே ஆதி புல்லணையிலே.
3. எப்பொருள் மேலாய் நின்ற விற்பன நூலான் ஆதி பொற்பரர் சுரர் பணிய அற்புதமாக (2) ஆதி அற்புதமாக.
4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள் தேட யூத ராயரென்றதாலே ஏரோதேயுமே வாட ஏரோதேயுமே வாட ஏரோதேயுமே.