மண்ணினாலே செய்ததடா
manninaalae seydhadhadaa
மண்ணினாலே செய்ததடா எம்படகு மன்னன் இயேசு செய்ததடா எம்படகு சேற்றினாலே செய்ததடா எம்பட்டு செம்மல் இயேசு செய்ததடா எம்படகு
இயேசு என்னும் மாலுமியாம் எம்படகு நேர்த்தியாக ஓட்டுரார் பார் எம்படகு
அலைகள் வந்து மோதினாலும் எம்படகு அசையாது குலுங்காது எம்படகு
சோக்கு நடை சொகுசு நடை எம்படகு சோராது தளராது எம்படகு
அங்குமிங்கும் நோக்காமல் எம்படகு மோட்சத்தையே நோக்கிக் கொண்டு எம்படகு
காற்று வந்து மோதினாலும் எம்படகு கலங்காது திகையாது எம்படகு