மண்ணின் சாயல் மாறுமே
mannin saayal maarumae
மண்ணின் சாயல் மாறுமே விண்ணின் சாயல் ஆகுமே மறுரூபம் ஆவேன் இயேசுவிலே – என் (2)
1. பசிதாகம் இல்லா உலகமது பஞ்சமும் துன்பமும் இல்லையங்கு வியாதியும் இல்லையே வருத்தமும் இல்லையே தேவனின் இராஜ்ஜியம் இன்பத்தின் எல்லையே என்று நான் காண்பேனோ பரலோகினை – என்
2. ஜீவத் தண்ணீருள்ள நதி ஒன்றுண்டாம் கனி தரும் ஜீவ விருட்சமுண்டாம் சூரிய சந்திரன் வேண்டுவதில்லையே தேவனின் மகிமையில் ஒளியெங்கும் வெள்ளமே பொற்தள வீதியில் ஆடிடுவேன் – என்
3. சீக்கிரம் வருவேன் என்று சென்றவர் நடுவானில் தோன்றிடும் நாள் நெருங்குதே மணவாட்டி நானுமே ஆயத்தமாகுவேன் நேசரைக் காணவே ஆவலும் பொங்குதே என்று நான் காண்பேனோ என் இயேசுவை – என்