மண்ணின் மக்களை எல்லாம்
mannin makkalai ellaam
மண்ணின் மக்களை எல்லாம் விண்ணோடு உயர்த்த இயேசுராஜன் பிறந்தார் மண்ணில் சொர்க்கம் தோன்ற மாட்டுத் தொழுவத்தில் ஏழைக்கோலம் ஏற்றார் தேவதூதர் பாடும் அல்லேலூயா கீதம் இடையர்கள் பாடினர் கேட்டு
வானத்தில் மின்னும் விண்மீன்கள் எல்லாம் தூங்குகின்ற பாலனை பார்க்கின்றதே சொர்க்கத்தின் சுகங்கள் எல்லாம் துறந்தே மனிதனாய் மண்ணில் பிறந்தாரே
இருளினைப் போக்கும் நிலவினைப் போல இயேசுவின் பூமுகம் ஜொலிக்கின்றதே சிகப்பான ரோஜா இதழினைப் போல இயேசுவின் பாதங்கள் தெரிகின்றதே