மண்ணில் வாழ்ந்து
mannil vaazhndhu
மண்ணில் வாழ்ந்து செல்லும் மனிதா விண்ணில் தேவன் இன்பம் தருவார் அன்று உன்னை அழைத்த தேவன் இன்று உன்னை அழைக்கின்றார்
இன்று உறவு, நாளை பிரிவு மனிதன் வாழும் எட்டிலே என்றும் அழியா உறவு உண்டு இறைவன் வாழும் வீட்டிலே
படைப்பின் இறைவன் படைப்பைக் காண கடைக்கண் ஒன்றைக் காட்டினான் பார்த்த மனிதன் மயக்கம் கொண்டு படைத்தவனில் மூழ்கினான்