மன்னன் கிறிஸ்து நாதர் இப்புவியில்
mannan kiristhu naadhar ippuviyil
மன்னன் கிறிஸ்து நாதர் இப்புவியில் வந்தார் மனுமக்களைக் காக்கவே அடிமையின் சாயலாய். தேவாதி தேவன் மனிதனாய் வந்தார் மனுக்கோலமானார் - 3
1. நம் ஆதிப் பெற்றோர் ஆதாம் ஏவாளும் தேவ சாயல் தரித்தவராய் ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்தனர் மகிமையுள்ள தேவன் மாண்பாய்ப் படைத்த தோட்டம் மகிமையுள்ள தேவன் மாண்பாய்ப் படைத்த தோட்டம் மாசற்ற முள்ளோராய் மகிமையின் வடிவாய்.
2. இரக்கமுள்ள தேவன் ஆதிப்பெற்றோரை நோக்கி நீங்கள் உண்டு களிக்க சகல கனிகளும் உண்டாம் இத்தோட்டத்தின் கனிகள் புசிக்க நல்லதாம் இத்தோட்டத்தின் கனிகள் புசிக்க நல்லதாம் எந்நாளும் நீங்கள் வாழ ஜீவகனியும் கொடுத்தேன்.
3. தோட்டத்தின் நடுவில் விசேஷ மரமாம் அந்த மரத்தின் கனியைப் புசிக்கவே வேண்டாம் புசிக்கும் அந்நாளில் மரணம் வருமே சந்தோஷம் நீங்கி என்றும் நீங்கள் வாழ நேருமே.
4. இக்கட்டளைக் கைக்கொண்டால் சோதனையினின்று சோதனை வரும்போது அவன் தோல்வி அடைவான் அம்மரத்தின் கிட்டே போகவே வேண்டாம் சோதிக்கும் இடமாக அவன் அங்கு இருப்பான்.
5. தேவ தூதரைப் போல் வசித்த நம் பெற்றோர் தேவ கட்டளையைக் காக்க அது தேவ சித்தமாம் கீழ்படிந்தாலும் என்றும் வாழலாம் பரலோகத்தின் சட்டம் என்றும் மாறாதாம்.
6. பாவத்தை அகற்ற குமாரன் தேவன்தான் வந்தார் அதிசயம் என்னும் நாமம் அவருக்குரியது ஆலோசனைக் கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதான பிரபுவாம்.