மண்ணான என் வாழ்வை வனையும்-களி
mannaana en vaazhvai vanaiyum-kali
மண்ணான என் வாழ்வை வனையும்-களி மண்ணான என் வாழ்வை வனையும் தேவா மனமிரங்கும்-2
குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கிடுமே-2 உம்மைப் போல் மாற்றிடுமே-என்னை உம்மைப்போல் மாற்றிடுமே-2 வனையும் முழுவதுமாய்-2
திசைமாறும் என் படகினை நேர்வழி படுத்துமையா புயல்கள் வீசும் என் வாழ்வினில் அமைதித் தாருமையா தள்ளாடி நடந்த என் வாழ்வினை உருவமாய் வனையுமையா-2 வனையும் முழுவதுமாய்-2
பிறரால் தள்ளப்பட்ட இந்தக் கல்லை மூலைக்கல்லாய் மாற்றினீரே அவமானம் நிறைந்த என் வாழ்வை மகிமையாய் நிரப்பினீரே உடைந்தேன் தவறினேன் மறுபடியும் வனைந்தீர்-2 வனைந்தீர் முழுவதுமாய்-2