மன்னாதி மன்னன் இயேசு பிறந்தார்
mannaadhi mannan yesu pirandhaar
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தார் மானிலம் யாவும் மகிழ்ந்திடவே மாட்சியாய் வந்து ஜெனித்தாரே மரியாளின் கன்னி மகனாகவே - அன்று
வாருங்கள் வந்து பாருங்கள் வானவர் இயேசுவைப் புல்லனையில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
மேய்ப்பர்கள் பயந்தனர் பேரொளியால் மேகத்தில் தூதர்கள் தொனி கேட்டே பேய்த்திறள் கூட்டம் நடுங்கிடவே பாரினில் உதித்தார் புண்ணியரே - இன்றும்
மானிடர் யாவர்க்கும் மகிபனிவர் நானிலம் தேடி வந்தனரே வானில் விண்மீன்கள் ஜொலித்திடவே வானவர் கீதம் பாடி வாழ்த்தினாரே