மணிக்கணக்காய் உம் பாதம்
manikkanakkaay um paadham
மணிக்கணக்காய் உம் பாதம் அமர வேண்டுமே - என் மனம்திறந்து உம்மோடு பேச வேண்டுமே இயேசுவே என் இயேசுவே
பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமே - ஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமே
உம் பாதம் அமர்ந்திட வேண்டும் உம்மோடு உறவாட வேண்டும் உம் திட்டம் அறிந்திட வேண்டும் உம் சித்தம் செய்திட வேண்டும்
பொறுமையாக காத்திருக்க பெலன் வேண்டுமே உம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமே