மனிதன் துரோகம் செய்யும் போது
manidhan thurogam seyyum podhu
மனிதன் துரோகம் செய்யும் போது துதித்தேன் துணையாய் நின்றிரே உறவுகள் தள்ளிவிடும் போது ஜெபித்தேன் ஜெயத்தை தந்தீரே – 2
என்னை தேடி வந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே என்னோடு இருந்தவரே என் நேசர் இயேசுவே – 2
கூட இருந்த மனிதர்கள் எல்லாம் தூஷணம் பேசினபோதும் தூசி தட்டி நிப்பாட்டி நேசித்த என் தேவனே – 2 ஆசையோடு என்னிடம் வந்து மார்போடு அனைத்தவரே – 2 பாசம் என்மேல் வைத்ததினால் பாடுவேன் கடைசி வரை – 2
அறியாத எதிரி படை என்னை சூழ நினைத்த போதும் எல்லாம் அறிந்தவர் என் பெயரை நிலைநிறுத்தினீர் – 2 ஒரு வழியாய் வந்தவர்கள் ஏழு வழியாய் ஓட செய்தீர் – 2 உமக்காய் ஓடிடுவேன் உம் ஊழியம் செய்திடுவேன் – 2