மனிதன் கதவை அடைப்பான்
manidhan kadhavai adaippaan
மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறா
நம்பி வா மகனேநம்பி வா
பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம்பற்றி நடத்தினாரே கொடுத்த வாக்கின்படி விடுதலை தந்தாரே உன்னையும் அழைத்தவர் உண்மையுள்ளவர் ஒரு நாளும் உன்னை மறந்திடமாட்டார்
ஆடுகள் மேய்த்தவனையும் அபிஷேகம் செய்தாரே ஆகாதவனையும் அரசனாய் மாற்றினாரே உன்னையும் மாற்றுவார் உருக்கமுள்ளவர் உயர்த்தி மகிழ்வார் இரக்கமுள்ளவர்
பகையாய் இருந்தவனையும் சீஷனாய் மாற்றினாரே உலகத்தை கலக்குகின்ற உத்தமனாய் உயர்த்தினாரே இயேசு நல்லவர் உனக்கும் வல்லவர் உன்னையும் மன்னித்து இன்றே உயர்த்துவார்