மனிதம் இன்று விடுதலை
manidham indru vidudhalai
மனிதம் இன்று விடுதலை அடைந்திடவே புனிதம் புவி புரட்சியாய் விடிந்திடவே -2 இறைமகன் குழந்தையாய் பிறந்துள்ளார் -2 இதயம் மகிழ்ந்திடும் புது உறவே
1. ஏழை என்று கோளை என்று சொல்லி வந்த வேளை பேழை போல ஏழை குடிலில் எழுந்து வந்த பாலன் -2 சாதி எங்கள் சாத்திரங்கள் -2 பூமி விட்டு விலகிடவே சமத்துவத்தின் இறையாட்சியை விடிய செய்த புது பகலவன் -2
2. உரிமை இழந்த அடிமை கோலம் தரித்து விழுந்த மாந்தர் உறவில் கரங்கள் கோர்த்து வாழும் உணர்வு வழங்கும் வேந்தன் -2 நீதிகளும் நியாயங்களும் -2 அச்சம் அகன்று செழித்திடவே உண்மைதனில் இல் உலகமெல்லாம் மகிழச் செய்த முழு மதியவன்-2