மணி ஓசைக் கேட்கின்றது
mani osaik ketkindradhu
மணி ஓசைக் கேட்கின்றது ஆ . . . . மன்னவன் அழைக்கின்றார் ஆ . - 2 மாந்தர்களே வாருங்கள் மணி தீபம் ஏற்றுவோம் கூடுங்கள் மாணிக்க விளக்காம் இயேசுவை - நம் மனமெனும் ஊஞ்சலில் ஏற்றுவோம்
அவர் குரல் இன்று கேட்டிடுவோம் அவர் பாத மலராய் வாழ்ந்திடவோம் - 2 வார்த்தையின் வடிவாம் உணவின் - உருவாம் இயேசுவின் சங்கமம் ஆகிடுவோம் வாருங்கள் இறைமக்களே சேருவோம் இறைபதமே
உடன்படிக்கை மக்களாக உயர்ந்திட இறைவன் அழைக்கின்றார் - பாவங்கள் நீங்க பரிசுத்தும் மலர படைத்தவர் பாதம் பணிந்திடவோம் வாருங்கள் இறைமக்களே சேருவோம் இறைபதமே