மங்கினதிரி என்று அணையாமலும்
manginadhiri endru anaiyaamalum
மங்கினதிரி என்று அணையாமலும் நெரிந்த நாணல் என்று முறியாமலும் மீண்டும் எரியச் செய்வார் நிமிர்ந்து வளரச் செய்வார் இயேசு என்பது அவர் நாமமே
உயர்த்திடுவோம் வாழ்த்திடுவோம் இயேசு என்ற திருநாமத்தை-2
1. மரித்து நான்கு நாளாயிற்றே நாறுமே என்றனர் அவரிடத்தில் அழைத்துச் சென்றனர் கல்லறையினிடம் கதறி அழுதனர் கண்ணீர் விட்டார்
லாசருவே வெளியே வா என்றார் மரித்தவவன் உயிர்பெற்று எழும்பி வந்தான் - உயர்த்திடுவோம்
2. காலமும் நாட்களும் உருண்டோடின முப்பத்தெட்டாண்டுகள் கடந்து விட்டன தண்ணீர் கலங்கும்வேளை இறக்கிட ஆளில்லை என்றே கூறினான் துயரமுடன்
படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னார் எழுந்துநடந்தான் படுக்கையுடன் - உயர்த்திடுவோம்