மங்கல வார்த்தை சீக்கிரமாய்
mangala vaarthai seekkiramaay
1. மங்கல வார்த்தை! சீக்கிரமாய் வானத்தில் தோன்றி மெய்ப் பக்தருக்காய் ஆளுகை செய்வார் மகத்துவமாய் யேசு வந்தருள்வார். மங்கல வார்த்தை! வந்தருள்வார் யேசு வந்தருளுவார். செய்தியைக் கூறும் எத்திசையிலும் யேசு வந்தருளுவார்.
2. மங்கல வார்த்தை! மரித்தோரும் ஜீவனோடெழுந் தாகாசத்திலும் ஏறி ஏகோபித் தானந்திக்கவும் யேசு வந்தருளுவார். மங்கல வார்த்தை! வந்தருள்வார் யேசு வந்தருளுவார். செய்தியைக் கூறும் எத்திசையிலும் யேசு வந்தருளுவார்.
3. மங்கல வார்த்தை! பேர் வாழ்வடைவோம் தீங்கணுகாமலும் ஓயந்திருப்போம் பாவமும் துக்கமும் ஒழிந்து போம் யேசு வந்தருளுவார். மங்கல வார்த்தை! வந்தருள்வார் யேசு வந்தருளுவார். செய்தியைக் கூறும் எத்திசையிலும் யேசு வந்தருளுவார்.
4. மங்கல வார்த்தை! மெய் வாக்கிதுவே! மீட்பரை நேசிக்கும் பக்தர்களே! பூரிப்புண்டாகும் அத்தினத்திலே யேசு வந்தருளுவார். மங்கல வார்த்தை! வந்தருள்வார் யேசு வந்தருளுவார். செய்தியைக் கூறும் எத்திசையிலும் யேசு வந்தருளுவார்.