மணவாளன் இயேசு
manavaalan yesu
மணவாளன் இயேசு வரப்போகிறார் மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு ஆயத்தப்படு , ஆயத்தப்படு மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2
1. இனி காலம் செல்லாது இனியும் தாமதம் ஏன் மெய்யாக இயேசு வரப்போகிறார் மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2
2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம் அவரோடு சென்றிடலாம் ஒரு நொடிப் பொழுதினிலே – நாம் மறுரூபமாகிடுவோம் – 2
3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில் சபையிலே தான் தொடங்கும் பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால் பரலோகம் சென்றிடலாம் – 2