மணவாளன் கர்த்தர்
manavaalan karthar
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே மணவாட்டி சந்திக்க நீ ஆயத்தம் தானா என் பிரியமே நீ ரூபவதி எழுந்து வா உன் நேசரை சந்திக்கவே
குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே காட்டுப் புறா சத்தம் நம் தேசம் நிறையுதே அத்திமரம் காய் காய்க்க காலம் வந்ததே திராட்ச செடி பூ பூத்து வாசம் பெருகுதே
மாரிகாலம் சென்றது மழையும் ஓய்ந்தது பூமியிலே புஷ்பங்கள் பூத்து குலுங்குது கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு
சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு தாகம் தீர்க்கும் ஜீவநதி கர்த்தர் இயேசு பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Am Bb C7 F F Bb Gm C7 F F Bb C7 Am F F Bb C Am Gm C7 F F Bb C7 Am F F Bb C Am Gm C7 F F Bb C7 Am F F Bb C Am Gm C7 F