மனந்திரும்ப இன்னும்
manandhirumba innum
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ
இனம் மதம் ஜாதி என்னும் இறுமாப்பை விட்டு இன்னும் இறங்கி நீ வரவில்லையோ-மகனே
தினமவர் வேதத்தைப் படித்தும் உன் சிந்தையில் தெளிவின்னும் வரவில்லையோ-மகனே
பணம் பட்டம் பதவி மோகம் உனைவிட்டு நீங்கி விடும் காலமும் வரவில்லையோ-மகனே
சினம் விட்டு நீயும் உன் சீரான வாழ்வுக்கு வழிவகுக்க எண்ணமில்லையோ
உனை மீட்ட இரட்சகரின் உன்னத சத்தியத்தை ஏற்றிட மனமில்லையோ-மகனே
உன் பாவச் சிறைமீட்க உலகினில் இரட்சகனாய் நம் இயேசு வரவில்லையோ
பெண் பாவச் சொல் கேட்டு ஆண் பாவம் தின்ற பழம் நம் பாவம் தொடரவில்லையோ-மகனே
உன் மனச் சாட்சியினை இன்னும் ஏன் ஏமாற்றி வாழ்கிறாய் புரியவில்லையோ
ஞானம் எனக்கில்லையென்று நாளை நாளையென்று காலத்தைக் கடத்துவதேன்-மகனே
நிலையற்ற இவ்வாழ்வை நிலையென்று நம்பியே நீ வேதத்தை படிப்பது ஏன்
கடுகளவு விசுவாசம் இல்லையெனில் உன் மனதில் கர்த்தரின் அன்பு இல்லையே-மகனே