மனமே நீ வாராய்
manamae nee vaaraay
மனமே நீ வாராய் கொல்கொதா சேராய் தேவ சுதன் அன்பின் ஆழம் நீளம் பாராய் - 2
மன்னா உலகமதில் நீ இதைப்போலொரு நேசம் - 2 கண்டதுண்டோ மனமே - மனமே
சேவகர் துய்ய மேனிதான் நொய்ய வாரினால் மிக அடித்தாரிதோ பாராய் - 2 கேவலக் கோலமோடு தாம் வசைகள் பலவேற்று - 2 உன் பாவத்தைச் சுமந்தார்
செங்கரமுடனே பங்கயக் கால்கள் ஆணியால் - 2 சிலுவையில் இறுக்கி அறைந்தார் பொங்கியே திரு உதிரம் நீர் ஊறிடும் ஊற்றாக - 2 வழிந்திடும் காட்சியைப் பாராய்
பொன்முடி சூடி பொன்னுலகாளும் பூபதி கொண்ட கோலமிதோ பாராய் - 2 முள்முடி சிரமதிலே தான் உறுத்திட செங்குருதி - 2 தம் சென்னியி லோடுதுபார் வீராதி
வீரன் விலாவினில் ஈட்டி பாய்ந்திட அந்தோ ஜலமுடன் உதிரம் பாராய் - 2 ஓராய் பாவமதனை இப்போ போக்கும் செஞ்சிலுவை - 2 கல்மனம் உனக்கு ஏனோ