மனம் விரும்பும் பாதைகளில்
manam virumbum paadhaigalil
மனம் விரும்பும் பாதைகளில் நடந்தால் ஒரு நாள் வருந்த நேரிடும் தேவன் விரும்பும் பாதைகளில் நடந்தால் ஆசீர்வாதம் வந்துவிடும்
திரும்புவோம் மனம் திரும்புவோம் தேவனிடம் நாம் திரும்புவோம்
போதுமேன்கிற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் ஆசைகளை நாம் அடக்கியே வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகிவிடும்
பணப்பிரியன் பணத்தினால் திருப்தி ஒருபோதும் வாழ்வில் அடைவது இல்லை ஐஸ்வரியம் வாழ்வில் மிகுதியாய் சேர்ந்தால் நிம்மதியை நாம் இழந்திடுவோம்
உலக ஆசை எல்லாம் மையை ஒருநாள் அவைகள் அழிந்தே போய்விடும் பரத்தை நோக்கி ஆசையாய் வாழ்ந்தால் பரமனிடம் நாம் சேர்ந்திடுவோம்