மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா
manam tharum malaril magizhndhidum iraivaa
மணம் தரும் மலரில் மகிழ்ந்திடும் இறைவா என் மனம் ஏற்க தயக்கமோ - நான் காகிதப் பூவென்ற வருத்தமோ
வசந்தம் மறுத்தால் காற்றிலும் வாழ்வேன் வான் மழை நின்றால் ஊற்றிலும் உய்வேன் ( 2 ) செல்வங்கள் மறுத்தால் ஏழ்மையில் வாழ்வேன் - 2 இயேசுவே நீயின்றி நான் எங்கு செல்வேன்
கனிகளைக் கொடுக்கும் கொடிகளின் முதல்வா கனிவுடன் படைத்திடும் காணிக்கை ஏற்பீர் ( 2 ) ஒலிவ மலைக்கு உம்முடன் வருவேன் - 2 உயிராய் உடலாய் உம்முடன் வாழ்வேன்