மனம் கலங்கிடும் மனிதனே
manam kalangidum manidhanae
மனம் கலங்கிடும் மனிதனே மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் -3
1. அவர் உன்னை விசாரிக்கும் தேவன் உன் கவலைகள் யாவும் அவர்மேல் வைத்துவிடு -2 அவர் உன்னை தேற்றிடுவார் -2 உங்கள் இதயம் கலங்கிட வேண்டாம் என்று சொன்னவர் அவர்தானே
2. தாங்கிட முடியா பாரம் சுமக்கின்றாயோ தந்தையான உன் இயேசுவிடம் கொடுப்பாய் -2 அவர் அதை சுமந்து கொள்வார் -2 உங்கள் இதயம் கலங்கிட வேண்டாம் என்று சொன்னவர் அவர்தானே
3. தனிமையிலே இருந்திடும் என் நண்பா தயவு செய்யும் உன் தேவனை நோக்கிப்பார் -2 தாயாய் வந்திடுவார் உனக்கு தாயாக வந்திடுவார் உங்கள் இதயம் கலங்கிட வேண்டாம் என்று சொன்னவர் அவர்தானே