மனம் காசிந்தேயொரு
manam kaasindheyoru
மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது-தன் ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு
மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு-உன் மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு
இனம் தெரியாத நோய் எது வந்தபோதும்-அதை குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு
உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு
பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது-பாவச் சுமையினில் எமை மீட்க வந்தது யாரு கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு
நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு-ஆவியில் எளிமைகொண்டே அடைக்கலம் கேளு
கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு-அந்த இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு