மனதறியும் மகாபிரபுவே
manadhariyum magaabirabuvae
மனதறியும் மகாபிரபுவே மனதின் விசாரம் தீர்த்திடுமே தீமைகள் அகற்றும் உம் கரங்கள் தாங்கி துணை எனக்களித்திடுமே
கஷ்டமாம் வாழ்க்கை தீச் சூளையை நான் கடக்கும்போது நீர் அருகில் உண்டே வல்லமை தந்திடும் உந்தனின் பிரசன்னம் வேதனை கண்ணீரை மாற்றிடுமே
வாழ்க்கையின் மேடுகள் கடந்திடும் போது வலக்கரம் பிடித்தென்னை நடந்திடுமே வாடி தளர்ந்து திகைத்திடும் போது தோளில் சுமந்திடும் மேய்ப்பரல்லோ
தண்ணீரை கடந்தோம் தேவனின் தயவால் தாண்டினோம் மதிலை அவர்பெலத்தால் ஆண்டுகொள்ளும் எங்கள் வாழ்க்கையின் பயணம் மீண்டெடுத்த என் மேசியாவே