மன மகிழ்ச்சி நாளில் மகிழ் கொண்டாடுவோம்
mana magizhcchi naalil magizh kondaaduvom
1. மன மகிழ்ச்சி நாளில் மகிழ் கொண்டாடுவோம் மன்னன் யேசு ஸ்வாமியை வாழ்த்தித் துதி செய்வோம்.
போற்று! போற்று! எம் யேசு ராஜனை. போற்று! போற்று! மகிமை ராஜனை.
2. பாலனாகப் பிறந்தார் பாலரை நேசித்தார் பரலோகம் சென்றாரே பாலர் எம் நேசரே.
3. கலிலேயாவில் ஜீவித்தார் கர்த்தர் கதை கேட்போம் அவரைத் துதி செய்வோம் அவர் எம் ரட்சகர்.
4. ஓ! எங்கள் ரட்சகரே உம் முன் பணிகிறோம். உமக்காக ஜீவிக்க உதவி புரியும்.