மலைகள் விலகிப்போனலும்
malaigal vilagipponalum
மலைகள் விலகிப்போனலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2
அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே
1. என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் - 2 எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் - 2
2 யேகோவா நிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் - 2 என் வாழ்வில் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் - 2
3 யேகோவா ராப்பா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் - 2 வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் - 2