மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம்
magizhvom yesuvil magizhvom
மகிழ்வோம், இயேசுவில் மகிழ்வோம் - பரண் மகிமை உற்றுமே மகிழ்வோம்.
மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம், மகிமையில் மகிழ.
வானில் யாவரும் மகிழ - இயேசு வாரும் என்றுமே பகிர மாறுவோர்க்கொரு சிகரம் - மன தாரத் தற்பரன் அருள் மகிமை, கனம், மகிமையில் மிகவும் மகிழ
பத்து ஜீவியம் உடைய - தேவ புத்திரர் முழங்கிடவே சர்வ சிருஷ்டிக்கும் உடைய - மா கர்மங்கள் என்றால் மகிழும் தினமும் மகிபன் தினமும் வரவே.
வானம் பூமியும் அகல நவ வானம் பூவுமே நிகழ சாபம் பாவம் சகல - கெடும் ரோகம் ஓடியே மறைய சுகமும் ஜெயமும் சகலரும் சுகித்து மகிழ.
பொன்னால் வீதிகளுடைய அரும் சொல்லால் உரைப்பதற்கரிய மின்னும் வச்சிர ஒளியே - நரர் கொண்டு நடந்திடும் அருளே கண்ணீர் கவலையும் நண்ணா நகரினில்
பளிங்கு போல் ஜீவநதியே - இரு கரையும் ஜீவனின் மரமே! பசியும் தாகமும் இல்லை! அங்கு புசிக்க ஜீவனின் கனியே! புசிப்போம் ருசிப்போம் இயேசுவின் நித்தியம் மகிழ
சுத்த ஆவியும் சுத்தனும் - செய்த மீட்பின் செயல் அதை பேரனும் மற்றும் தூதர்கள் கணமும் - அங்கு உற்று உள்ளம் மகிழ போற்றிப் புகழ்வோம் நூதன செயலில் மகிழ