மகிழச் செய்தாரே
magizhas seydhaarae
மகிழச் செய்தாரே - என்னை மகிழச் செய்தாரே மனதுருகும் தேவன் அவரே மகிழச் செய்தாரே - என்னை
1. வாழ்க்கை அலைகள் மோதி எந்தன் விசுவாசத்தைக் கவிழ்த்த போது அவற்றை அடக்கி மாத்தி என்னை வாழச் செய்தாரே - என்னைப் வாழச் செய்தாரே
2. உதவி செய்யும் என அவரை உண்மையாக பணிந்து கொண்டால் உந்தன் வேதனை நீங்க செய்தே மகிழச் செய்வதே - அவரை புகழ் செய்வாரே
3. துக்கப்பட்ட நாட்களுக்கும் நொந்துபோன காலத்திற்கும் ஒத்த வண்ணம் திசையை மாற்றி - ஈடு செய்வாரே - அவரே ஈடு செய்வாரே