மகிமையுள்ள பரமராஜா
magimaiyulla paramaraajaa
1. மகிமையுள்ள பரமராஜா மகிமையோடின்று உந்தன் மகத்துவமுள்ள ஆலயத்தின் எழுந்தருளுமேன்
2, கறை திரைகள் குறைகள் ஒன்றும் எம்மில் இல்லாத நாதா சபையை முற்றும் சுத்திகரித்தாசீர்வதிப்பீர்
3. புதிய தூது சபையில் இன்று வெளிப்படுத்த வே உந்தன் புதிய சக்தி பேசும் தாசர்க்களித்தருளுமே
4. ஆதிச் சபையில் நடந்த அற்புதங்கள் - இன்று இச்சபையிலே நடக்க அருள் புரியும்
5. சபை கூடும் போது உள்ள வல்ல கிருபை வரங்கள் - இன்றே சபையிலுள்ள தாசர் மேலே ஈந்திடுவீரே
6. அற்புதங்கள் அடையாலங்கள் ரோக சௌக்யங்கள்- சபையில் பிரத்தியட்சமாய் கண்டிட வாஞ்சிக்கிறோம் நாம்
7, சுத்தர் கூட்டம் சபையிற் கூடி ஐக்கியமாகவே - பரி சுத்தரோடு ஒன்றாய்க்கூட வாஞ்சிக்கிறோம் நாம்
8. ஸ்தோத்திர சத்தம் சபையிலுள்ளோர் ஆர்ப்பரிக்க - தேவா ஸ்தோத்திரம் செய்ய பாத்திரராக பாதம் வீழ்கிறோம்