மகிமையுள்ள மா யேசு ராஜன்
magimaiyulla maa yesu raajan
மகிமையுள்ள மா யேசு ராஜன் வான தூத சேனைகளோடு சீக்ரம் வாறார் - ஆனந்தமாமே.
1. பூமியும் அதிசயிக்க வானோர்கள் ஆர்ப்பரிக்க தூதரொளியுடன் மேகமதில் வாறார் ஏழைகள் நாம் யேசுவைச் சந்திப்போம் ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே.
2. எக்காளம் தான் தொனிக்க வாஞ்சைகள் யாவும் தீர நண்பரின் பக்கத்தில் யாவரும் கூடியே ஆனந்தம் பாடி நாம் யேசுவைப் போற்றிட ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே.
3. பூமியின் ஜாதிகளும் தேசத்தின் இராஜக்களும் மனுவேல் ராஜனால் நியாயத் தீர்ப்படைய அன்பார்ந்த நாங்கள் யேசுவுடன் நிற்போம் ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே.
4. ஆயிரம் ஆண்டுகளும் வானத்தின் ஆட்சிகளும் முற்றுமாய்த் தீர்ந்தபின் புது பூமியில் நாங்கள் நித்தியம் ஜீவித்து என்றும் சுகித்திட ஆ! ஆ! ஆ! ஆ! ஆனந்தமாமே.