மகிமையோடு இயேசு உயிர்த்தெழுந்தாரே
magimaiyodu yesu uyirthezhundhaarae
மகிமையோடு இயேசு உயிர்த்தெழுந்தாரே --(2) அவர் ஜெயித்தெழுந்தாரே சாத்தானை முறியடித்தாரே ஆனந்த கீதம் பாடுவோம்--(2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகிழ்ந்து பாடுவோம் நம் அன்பர் வெற்றி சிறந்தார் நாம் துதித்து பாடுவோம் நாம் ஆர்ப்பரிப்போமே மன்னாதி மன்னன் வாழ்கவே
சர்வ வல்லவர் அவர் மகிமையானவர் மூன்றாம் நாளினில் மரணத்தின் கூரை முறித்தார் நாம் போற்றிப் புகழ்வோம் நடனமாடி போற்றுவோம் ராஜாதிராஜன் வாழ்கவே
உயிர்த்த இயேசு எனக்குள் வாழ்கிறார் எந்தன் ஆத்துமா எனக்குள்ளே பூரிப்பாகுதே இயேசு வல்லமை உள்ளவர் அவர் சாவாமை உடையவர் தேவாதி தேவன் வாழ்கவே