மகிமையின் ராஜா கோலத்தை விட்டு
magimaiyin raajaa kolathai vittu
1. மகிமையின் ராஜா கோலத்தை விட்டு இவ்வுலகம் வந்தீர் எனக்காய். ஆனால் பெத்லகேமில் உம் பிறப்பிற்கு இடமில்லாமல் போயிற்றே!
வாரும் என் உள்ளத்தில் தேவா! உமக்கு இடமுண்டு என்னில்
2. உம் மா அதிசய பிறப்பைக் கூறி தூதர்கள் பாடி மகிழ்ந்தார்கள். ஆனால் எளிமையாக இவ்வுலகத்தில் உம்மைத் தாழ்த்தினீர் எனக்காய்.
3. நரிகளுக்குக் குழியும் ஆகாய பறவைகளுக்குக் கூடுண்டே. ஆனால் கலிலேயா நாட்டில் உம் தலையை சாய்க்க இடமும் இல்லையே.
4. தேவனே நீர் ஜீவ வார்த்தையாய் வந்தீர் உம் மக்களை விடுவிக்கவே. ஆனால் முள்மடி சூட்டி நிந்தித்து உம்மை நடத்தினார்கள் கல்வாரி.
5. நீர் மகிமையாய் தூத சேனையுடன் வானில் ராஜனாய் வரும்போது "மகனே என்னிடம் இடமுண்டுனக்கு என்ற உம் வார்த்தை கேட்கட்டும்.
என் இதயத்தில் பூரிப்பேன் அவ்வார்த்தையை நான் கேட்கும்போது.