மகிமையின் இராஜா
magimaiyin iraajaa
மகிமையின் இராஜா இயேசு மகிழ்வாய் அவருடன் பேசு உத்தம இருதயத்தோடு - நீ எப்பொழுதும் உறவாடு
1. நடுக்கடலாயிருந்தாலும் நாலாம் ஜாம வேளையானாலும் அழைத்ததும் ஓடி வருவார் அடைக்கலம் வாழ்வில் தருவார்
2. பேய்களும் நடுங்கிடும் நாமம் பெரும்புயல் அடக்கிடும் நாமம் ஆவியும் ஜீவனுமாகும் ஆண்டவர் இயேசுவின் நாமம்
3. இனிவரும் காலம் கொஞ்சம் அறுவடைக்கு ஆட்கள் பஞ்சம் கிருபையின் நாட்களை நினைத்து அவர் வருகைக்கு ஆயத்தப்படுத்து