மகிமை மகிமை மகிமை
magimai magimai magimai
மகிமை மகிமை மகிமை இது இயேசுவின் மகிமை 2 இது மகிமையின் ஆண்டல்லவா கிருபையாய் இறங்கும் மகிமை 2
தளர்ந்த கைகளைத் திடப்படுத்த தள்ளாடும் முழங்காலை பெலப்படுத்த - 2 இறங்கும் மகிமையே - இது லீபனோனின் மகிமையே இறங்கும் மகிமையே - இது கர்த்தரின் மகிமையே
வனாந்திரமும் மகழ்ந்து களிக்க வறண்ட நிலமும் புஷ்பத்தைப் போல் செழிக்க
குருடரின் கண்கள் திறக்கப்பட செவிடரின் செவிகள் கேட்கப்பட
முடவன் மானைப்போல் குதிக்க ஊமையன் நாவும் கெம்பீரிக்க
வரங்களினால் நம்மை அலங்கரிக்க அபிஷேகத்தால் நம்மை நிரப்பிட