மகிமை மாட்சிமை நிறைந்தவரே
magimai maatsimai niraindhavarae
மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம்
உன்னத தேவன் நீரே ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே என்றும் தொழுதிடுவோம்
ஒருவரும் சேராஒளியில் வாசம் செய்பவரே ஒளியினை தந்துமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளி நிறைவே அருள்நிறைவே என்றும் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவன்நீரே பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம்
நித்திய தேவனும் நீரே நீதி நிறைந்தவரே அடைக்கலமானவரே அன்பு நிறைந்தவரே நல்லவரே வல்லவரே என்றும் தொழுதிடுவோம்
அற்புத தேவன் நீரே! ஆசீர் அளிப்பவரே! அகமதில் மகிழ்ந்துமே துதியினால் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C F C Dm C G A# C Dm Dm C Dm A# Dm G C F A7 Dm F C A# C Dm Dm C Dm A# Dm G C F A7 Dm F C A# C Dm