மகிபனாம் இயேசுவே
magibanaam yesuvae
1. மகிபனாம் இயேசுவே தோன்றுவார் வானில் மாசில்லா சுத்தரைச் சேர்த்திடவே கண்ணிமைதனிலே மறுரூபமடைந்தே விண்ணிலவரோடு மறைந்திடுவார்
எக்காளம் தொனிக்கும் நேரம் இயேசுவைக் காண்போம் நம் அல்லல்கள் யாவும் மறந்து ஆளுவோம் என்றென்றுமாய்
2. புற்றிடும் கனலெரி சோதனை வேளை புதுமையென்றெண்ணியே திகையாமலே கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் பாடுகள் சகித்தோரே மகிழ்ந்திடுவார் - எக்காளம்
3. விசுவாச வீரன் இயேசுவை நோக்கி விசுவாச வீரராய்ப் போர் செய்தவர் அழியாத மாசற்ற வாடாததுமாம் சுதந்திரம் பெற்றென்றும் வாழ்ந்திடுவார்- எக்காளம்
4. கிறிஸ்துவின் அன்பில் நித நிறைந்தோராய் சோர சிநேகத்தில் நிலை நின்றவர் கிறிஸ்துவின் நாளில் இதயத்தில் ஸ்திரமாய் பிழையற்ற சுத்தராய்த் திகழ்ந்திடுவார் - எக்காளம்
5. சீயோன் சாலேமின் வேலையும் தீர்த்தே சீயோனின் ராஜானே வெளிப்படுவார் கர்த்தர் முகம் நித்தமும் கண்டே சுத்தரே நித்தியம் சேவிப்பாரே - எக்காளம்