மகனே ஓ மகளே
maganae o magalae
மகனே ஓ! மகளே உன் இதயத்தைத் தாராயோ இப்போ தாராயோ!
1. கெட்டமகனைப்போல துஷ்ட வழிகளிலே மட்டு மிஞ்சி நீ அலைந்தும் உனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டே அரவணைப்பேன் திட்டம் இது நீ ஓடிவா
2 அஞ்சாமனதுடனே பஞ்சமா பாதகங்கள் மிஞ்சவுமே புரிந்தாய் - என் நெஞ்சம் உருகுது பார் பஞ்சகாயங்களிலே தஞ்சம் தருவேன் வாராயோ
3. அங்கரங்கள் துளைக்கச் செங்குருதி சுரக்கத் தொங்கிக் குருசில் மரித்தேன் - உன் பங்கமனைத்தும் போக்கித்தங்க அரண்மனையில் சிங்காசனத்தி லமர்த்த
4. கையிலுனையெடுத்து மெய்யாயரவணைத்துக் கண்ணீர்கள் யாவும் துடைப்பேன் - நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப் பெய்வேன் ஆசீர்வாதங்கள் நையாது காத்திடுவேன்
5. நித்திய ராஜியத்தில் நித்திய ஜீவனோடு நித்திய காலம் வாழலாம் - பரி கத்த உலகமதில் அத்தன் மகிமையதில் நித்தம் சுகித்திடலாம்