மகா மேன்மையும் அருமையுமான
magaa menmaiyum arumaiyumaana
மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை கொடுத்து உந்தன் அளவில்லா ஆசீர் என்மேல் தாங்க செய்தீரே – இயேசையா (2)
உந்தன் அன்பை பாடி உந்தன் பண்மை புகழ்ந்து உம் பாதம் பணிந்து தொழுதுதிடுவேன் – 2 ஆராதிக்கின்றேன் (2) என் அன்பின் (இராஜனை) ஆராதிக்கிறேன் (2)
சென்ற இடமெல்லாம் என் கூட வந்தீரே செய்த எல்லாவற்றிலும் பலன் தந்தீரே – 2 ஜெபங்களுக்கெல்லாம் பதில் தந்தீரே ஜெயமதை ஈந்து மகிழ செய்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் எபிநேசருக்கு ஸ்தோத்திரம்
பாவம் போக்கினீர் என்னை தூய்மையாக்கினீர் புத்தம் புதிய வாழ்வளித்து புது சிருஷ்டியாக்கினீர்-2 புது புது கிருபை தினம் தினம் தந்தீரே… புதிய எண்ணெயால் அபிஷேகித்தீரே… ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் அபிஷேக நாதருக்கு ஸ்தோத்திரம்
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி தந்தீரே பாதைககளெல்லாம் நெய்யாய் பொழிந்திட கிருபை செய்தீரே-2 சாட்சியாய் வாழ்ந்து சத்தியம் பேசிடுமே சாத்தானை ஜெயித்து சபைகள் நிரம்பிட செய்யுமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் எங்கள் இராஜாதி இராஜாவே ஸ்தோத்திரம