மதுரம் உம் நேசம்
madhuram um nesam
மதுரம் உம் நேசம் மனதும் ஏங்குதே இனிமை உம் பிரசன்னம் மனம் என்றும் தேடுதே
சோர்ந்து போன நேரம் உடைக்கப்பட்ட நேரம் கதறி அழுத நேரம் பெலனற்ற நேரம்
தழுவி எனை அணைத்தீர் கண்ணீர் யாவும் துடைத்தீர்
தனிமையில் ஓர் பயணம் தேற்றிட யாருமில்லை தகப்பன் நீர் ஓடி வந்து காயம் கட்டினீர் உம் தோள் மீது சுமந்து என்னை காப்பாற்றினீர்
குழிக்குள் தவித்திருந்தேன் தூக்கிட யாருமில்லை அழைத்தவர் நீர் என்னை பாதுகாத்தீரே சொன்னதை நிறைவேற்றி உயர்த்தி மகிழ்ந்தீரே