மதுர கீதம் ஆ ஆ ஆ
madhura geedham aa aa aa
மதுர கீதம் ஆ! ஆ! ஆ! மகிழ்ந்து பாடுவோம்
1. அளவில்லாத அன்பின் நல் உருவம் அன்பர் இயேசுவின் தினம் கண்டோம் அருளினால் ஆனந்தம் ஆர்ப்பரித்தே பாடுவோம் - மதுர
2. ஆதி லோகமதில் அஸ்திபாரம் மேவு முன்னதாக நம் நாமம் தாவி நினைவாக சீயோனில் ஜீவனுக்காய் வரைந்ததால் - மதுர
3. பாவியாய் உளை சேற்றினில் அமிழும் வேளை யெம்மைத் தாமரவணைத்தே ஜீவனூற்றியே சாவை நீக்கியே தேவ சுதராய்ச் சேர்த்ததால் - மதுர
4. ஜீவனுள்ள கற்கள் அவரில் சேர்த்துக் கட்டிடச் சீயோன் நகரில் அனுக்கிரகத்தால் ஆவியாலே அபிஷேகித்தார் ஆனந்தம் - மதுர
5. கீதம் பாடிய வேறொன்று மில்லையே நாதன் இன்ப நாமமதல்லால் வேதமும் ஜீவ நாதமும் பிர சாதமும் இயேசு வானதால் - மதுர