மாயையும் வெறுமையும்
maayaiyum verumaiyum
மாயையும் வெறுமையும் ஆனதே என் வாழ்க்கை நிரந்தரம் அற்றதே - 2
வானத்தின் கீழ் காணும் யாவுமே பார்வைக்கு தவறாய் தோன்றுதே - 2
உம் பார்வை விட்டு சென்ற நிமிடங்கள் உம் அன்பை மறந்து போன நொடிகள் - 2 வலிகளும் வேதனையும் என் துணையானதே மனிதனின் அன்பும் சிநேகமும் சாரமற்றதே - 2
எந்தன் நில அறிந்தும் என்னை புரிந்தும் தேடி வந்தவரே சிதறின என் இதயத்தை உன் கரத்தால் வணைந்தீரே - 2
என் வாழ்வில் நீர் வந்த நேரம் உம் அன்பை நானும் கொஞ்சம் ரசித்தேன் - 2 என் பாடுகள் தூசி போல் சிதறி சென்றதே உம் துணை மட்டும் என் வாழ்வில் நிரந்தரமானதே