மாயை உலகத்திலே
maayai ulagathilae
மாயை உலகத்திலே அன்பை தேடி ஓடும் நண்பா உண்மை அன்பு உலகில் இல்லை என் இயேசுவிடம் உண்டு
தாய் தந்தை அன்பெல்லாம் பொய் நண்பா உலகம் உன்னில் காட்டும் பாசம் வேஷம் நண்பா இயேசுவின் அன்பு அது மாறிடாதது - அது உனக்காகவே சிலுவையில் ஜீவன் கொடுத்தது
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே - நீ வருவாயா இயேசு உன்னை நேசிக்கிறார் உன்னோடு பேச துடிக்கிறார் உன்னை பார்க்க நினைக்கிறார் நீ ஓடி வந்து இயேசு உன்னை அழைக்கிறார்
கடவுளாக முயற்சி செய்யும் மனிதனே - உனக்காக மனிதனாக பிறந்தார் என் இயேசுவே உனக்காகவே மனிதனாய் பிறந்தார் உன் பாவத்தை போக்க அவர் சிலுவையில் மரித்தார்