மாட்டுத்தொழுவத்தில்
maattuthozhuvathil
மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் இயேசு பிறந்தாரே கொட்டும் பனியிலே இராஜாவாக இயேசு பிறந்தாரே-2
நம் பாவங்கள் போக்க சாபங்கள் நீக்க பூலோகம் வந்தாரே-4
விண்மீன் காட்டிய வழி இது இருளை போக்கிய ஒளி இது நம் இயேசு இராஜாவின் வழி-2
சின்ன குழந்தை சிரிப்பினில் இதயங்கள் மகிழுதே செல்ல குழந்தையின் வருகையால் இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில்
தூதர் உம்மையே துதித்திட இடையர் உம்மையே வணங்கிட சாஸ்திரியர் உம்மை தொழுதிட
இருள் போக்க பிறந்தாரே கனிவாய் பரலோகம் திறந்தாரே மாந்தர்கள் மத்தியில் நமக்காக இயேசு பாலனாய் பிறந்தாரே-2