மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை
maatsi migum motsa nagar magimai
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் அந்த மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன்.
1. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே - அங்கு பாடுவோரும் ஆடுவோரும் கோடா கோடியே.
2. முத்து மயமா யிலங்கும் பட்டணமது - நமது முன்னோரெல்லாம் போகப் போகும் பட்டணமது.
3. ஜீவ நதி பாயுகின்ற பட்டணமது - நிதம் சித்திர முடனிலங்கும் பட்டணமது.
4. சாவு துக்கமே இல்லாத பட்டணமது - நிதம் சங்கீத முடனிலங்கும் பட்டணமது.
5. நாமெல்லாரும் நாடுகின்ற பட்டணமது - நமது நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது.