மாசில்லா சுத்த ராய்
maasillaa sutha raay
1. மாசில்லா சுத்த ராய் காசினி மீதினில் மாண்புறும் சேவை செய்தவர் ஆசையோடேசுவை பின்சென்றோரிவரே சீயோனில் நின்றிலங்குவார்
சீயோனில் கேட்குதே ஆ ! ஜெயகீதமாய் தூயவர் ஜீவியமே அன்பருடனிவர் என்றென்றும் ஆளுவார் அல்லேலூயா ! அல்லேலூயா !
2. மாநில இன்பம், மாந்தரின் பந்தமும் யாவையும் வெறுத்தவரை தேவசித்தம் செய்து தந்தையானோரே தேவனால் மேன்மையுறுவார் - சீயோன்
3. பஞ்சம் பசியுமாய், நிந்தை துயருடன் பாரினில் பாடு சகித்தோர் சேவிப்பார் தாதன் முகம் கண்டு நித்தியமாய் சேவையில் ஜீவன் வைத்தால் - சீயோன்
4. அப்போஸ்தல ரவர் நல் உபதேசம் தப்பற போதித்தவர் சீருடன் போர் புரிந்தவர் பாதங்கள் சீயோனில் நிற்குமென்றுமே - சீயோன்
5. சிந்தையில் சுத்தராய் இப்பூவில் இயேசுவை சேவித்த சுத்தரவர்க்காய் சீயோனின் வேலை தீர்த்து மகிமை லவர் சீக்கிரம் வெளிப்படுவார் - சீயோன்