மார்கழி மாதத்து வெண்பனியே
maargazhi maadhathu venbaniyae
மார்கழி மாதத்து வெண்பனியே மனிதனாய் பிறந்த என் இயேசுவே மாட்டுக்குடிலில் மரி ஈன்ற மாணிக்கம் நீர் மாறா உறவால் மீட்க வந்த மீட்பரும் நீர்
ஆரிரோ ஆரிரோ ஆ... ராரிரோ
கண்ணான கண்ணே கண்மூடி கண்ணுறங்கு ஆரிரோ ஆரிரோ ஆ... ராரிரோ மனித உருவில் மாபரனாய் மழலை வடிவில் என் தெய்வமாய் மாறாத நேசர் பாலகனாய் இம்மண்ணில் பிறந்தாரே (2)
இசையில் எழும் ஏழு ஸ்வரம் உன் சிரிப்பு உன் சினுங்கள் சத்தத்தில் சொட்ட சொட்ட நனைகிறதே
இணைந்த உறவில் இன்பமாய் கலைந்த நினைவில் கணமாய் வாரிக் கொடுக்கும் இயேசுவே நீர் எனக்காய் பிறந்தீரே (2)
உன் சுவாசம் சுமந்து வரும் பூங்காற்று பூமியெங்கும் புன்னகை பூக்களை தெளிக்கின்றதே