மார்கழி மாதத்து
maargazhi maadhathu
மார்கழி மாதத்து பனியினிலே மன்னன் பிறந்தது தொழுவினிலே-2 தூதர்கள் பாடிடும் பொழுதினிலே துயில்கின்றது அன்னை மடியினிலே-2
உறவின் பாலம் உதித்ததிங்கே உலகம் உறையும் மாதத்திலே-2 அன்பின் தெய்வம் மனித உருவம் கொண்டார் அகிலம் எங்கும் அவரின் காதலே அவரில் மகிழ்க்கொண்டு நாமும் பாடி இறையமுதை இதயத்தில் போற்றிடுவோம்-மார்கழி