மாராநாதா அல்லேலூயா
maaraanaadhaa alleluya
மாராநாதா அல்லேலூயா இயேசுராஜா வரப்போகிறார
அல்லேலூயா பாடி துதித்திடு ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு
கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே
கவலையில்லா தேசமது கண்ணீரில்லா தேசமது கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது
பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம் பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்
இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே